தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புத்தாக்க பொறியாளர் பயிற்சி இணையத்தில் விண்ணப்பம்

புத்தாக்க பொறியாளர் பயிற்சி இணையத்தில் விண்ணப்பம்

புத்தாக்க பொறியாளர் பயிற்சி இணையத்தில் விண்ணப்பம்


ADDED : மார் 22, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2025 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்,

'தாட்கோ' வாயிலாக இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்தோருக்கு, புத்தாக்க பொறியாளர் பயிற்சி பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் 'தாட்கோ' வாயிலாக, இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சியில் கணினி பொறியியல் நிபுணத்துவம், புதுமைத் திறன் வழங்குதல் உள்ளிட்டவை அளிக்கப்படும்.

மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறை, தானியங்கி தொழில் துறை, இயந்திரவியல் மற்றும் சேர்க்கை உற்பத்தி போன்ற முக்கிய துறை வாயிலாக பயிற்சி அளிக்கப்படும்.

கடந்தாண்டு பயிற்சி பெற்ற 28 இளைஞர்கள் தனியார் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் இப்பயிற்சியை பெற, 2022, 2023 மற்றும் 2024ம் கல்வியாண்டில், ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 21-25.

குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு உட்பட்டோர், www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி காலம் 18 வாரம். கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன், 18 வாரம் பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us