/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழந்தை நலக்குழு தலைவர் நியமன விண்ணப்பம் வரவேற்பு
/
குழந்தை நலக்குழு தலைவர் நியமன விண்ணப்பம் வரவேற்பு
ADDED : நவ 28, 2024 03:07 AM
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட குழந்தை நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர் நியமிக்கப்பட உள்ளனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், குழந்தை நல குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்விஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கான நலப்பணியில் குறைந்தது 7 ஆண்டு செயல்பட்டிருக்க வேண்டும். தகுதி யுள்ளோர், மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து விண்ணப்பம் பெற்று, இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600 010 என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.