/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'கபீர் புரஸ்கார்' விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
'கபீர் புரஸ்கார்' விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : டிச 12, 2024 11:44 PM
திருவள்ளூர்:சமுதாய நல்லிணக்கத்திற்கான, 'கபீர் புரஸ்கார்' விருதுக்கு, நாளை மறுதினத்திற்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சமுதாய நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார்' விருது, ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தன்று வழங்கப்படும். நடப்பு ஆண்டிற்கான, 'கபீர் புரஸ்கார்' விருதுக்கு, சமுதாய நல்லிணக்க செயல் புரிந்தோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தினை, நாளை மறுதினத்திற்குள், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பதக்கம் பெற தகுதியுள்ளவர்களை, அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்டு, வரும் குடியரசு தினத்தன்று முதல்வரால் விருது வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

