/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஏப் 15, 2025 06:42 PM
திருவள்ளூர்: நடப்பு 2024 - -2025-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், சமுதாய அமைப்புகளின் தொடர்ச்சியான கூட்ட நடவடிக்கை, நிதி பயன்பாடு மற்றும் சேமிப்பு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பெருங்கடன், சமுதாயம் சார்ந்த பணிகளில் பங்கு பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொகுத்து, 'மணிமேகலை விருது' பெற சமுதாய அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.
மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதியானோர், சம்பந்தப்பட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்களிடம் உரிய விபரங்களை பூர்த்தி செய்து, வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

