/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்பள்ளி துவங்க விண்ணப்பம் வரவேற்பு
/
தொழிற்பள்ளி துவங்க விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜன 08, 2025 07:52 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய தொழிற்பள்ளி துவக்க, இணையத்தில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் 2025 - 26ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் நீட்டிப்பு மற்றும் கூடுதல் தொழிற்பிரிவுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பம் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்.
அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் 5,000 மற்றும் ஆய்வு கட்டணம் 8,000 ஆகியவற்றை இணையம் வாயிலாக செலுத்த வேண்டும்.
அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரை பெற, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.