/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழந்தை நலக்குழு உறுப்பினர் நியமனம்
/
குழந்தை நலக்குழு உறுப்பினர் நியமனம்
ADDED : பிப் 17, 2024 11:18 PM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில், குழந்தை நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர் நியமிக்கப்பட உள்ளனர்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர் நியமிக்கப்பட உள்ளனர். குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பட்டதாரிகள், குழந்தைகள் தொடர்பான நலப்பணிகளில் ஏழு ஆண்டுகள் செயலாற்றியிருக்க வேண்டும்.
மேற்கண்ட கல்வித் தகுதியும், 35 - 65 வயதிற்கு உட்பட்டோர், விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பெற்று, பூர்த்தி செய்து, இயக்குனர், சமூக பாதுகாப்பு துறை,
புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 600 010 என்ற முகவரிக்கு 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.