/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை பணியாளர் 23 பேருக்கு பணி நியமன ஆணை
/
சாலை பணியாளர் 23 பேருக்கு பணி நியமன ஆணை
ADDED : ஆக 27, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், 23 சாலை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழக அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தால், ஒருங்கிணைந்த பொறியியல் சார் நிலைப் பணி தொகுதி தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 23 பேர், திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் கிராம ஊராட்சி, ஒன்றிய அலுவலகங்களுக்கு, பணி நியமன ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு, கலெக்டர் பிரதாப் நேற்று, பணி நியமன ஆணை வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், செயற்பொறியாளர் ராஜவேல் பங்கேற்றனர்.

