/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில் நிலைய சாலைகள் ஒரு வழிச்சாலையாகுமா?
/
ரயில் நிலைய சாலைகள் ஒரு வழிச்சாலையாகுமா?
ADDED : செப் 22, 2024 12:22 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் இருந்து ரயில் நிலையத்தை இணைக்க, வசந்த பஜார் சாலை மற்றும் ரயில் நிலைய சாலை என இரு சாலைகள் உள்ளன.
குறுகலான இரு சாலைகளிலும் நுாற்றுக்கணக்கான கடைகள் இருப்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். இரு கார்கள் எதிர் எதிரே அந்த சாலைகளில் செல்ல முடியாது. இதனால் பரபரப்பான காலை மற்றும் மாலை நேரத்தில், அந்த சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ரயில் பயணியர் தவிக்க நேரிடுகிறது.
ரயில் பயணியரின் நலன் கருதி, மேற்கண்ட இரு சாலைகளை ஒரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். ஒரு சாலை, ஜி.என்.டி., சாலையில் இருந்து ரயில் நிலையம் செல்வதற்கும், மற்றொரு சாலை ரயில் நிலையத்தில் இருந்து ஜி.என்.டி., சாலை வருவதற்கும் என மாற்ற வேண்டும். அதற்கு கும்மிடிப்பூண்டி போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.