/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜெ.ஜெ.கார்டனில் சாலை அமைக்க பகுதிவாசிகள் மனு
/
ஜெ.ஜெ.கார்டனில் சாலை அமைக்க பகுதிவாசிகள் மனு
ADDED : பிப் 17, 2025 11:08 PM

திருவள்ளூர், சிறுவானுார், ஜெ.ஜெ.கார்டனில் சாலை அமைக்கக் கோரி கலெக்டரிடம் அப்பகுதிவாசிகள் மனு அளித்தனர்.
மனு விபரம்:
திருவள்ளூர் அடுத்த, பூண்டி ஒன்றியம், சிறுவானுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ.கார்டன், ஜெ.ஜெ.நகர் மற்றும் இணைப்பு, எஸ்.ஜே.என்., குடியிருப்பு என, 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த குடியிருப்பு பகுதிகளில், முறையான சாலை வசதி இல்லை. மழை காலத்தில், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, ஓடுகிறது. சாலை வசதி கோரி, இந்த குடியிருப்புவாசிகள், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர், கலெக்டர் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.
இதையடுத்து, 1,000 மீட்டருக்கு கருங்கல் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை, தற்போது பெயர்ந்து சேதமடைந்ததால், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் சாலையில் நடமாட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே, எங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அடுத்த மழைக்காலத்திற்குள் தரமான தார் சாலை அமைத்துத் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.