ADDED : ஆக 23, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:காஞ்சிப்பாடி அருகே லாரி மோதியதில், ஸ்கூட்டரில் சென்ற ஆயுதப்படை காவலர் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, சொரக்காப்பேட்டையைச் சேர்ந்தவர் யுவராஜ், 33. ஆவடியில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு பணி முடிந்து, ஆவடியில் இருந்து பள்ளிப்பட்டுக்கு 'டி.வி.எஸ்.,' ஸ்கூட்டரில் சென்றார். சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அடுத்த காஞ்சிப்பாடி அருகே வந்த போது, எதிரே வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.