ADDED : பிப் 11, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்,திருவள்ளூர் அடுத்த, பட்டரைபெரும்புதுார் பகுதியில், 'கோல்ட் எர்த் சிட்டி' என்ற இடத்தில், நேற்று முன்தினம், திருவள்ளூர் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்த விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சரத், 20, பாலாஜி, 20, ஆகியோர் என தெரிய வந்தது, மேலும், அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

