ADDED : ஜன 15, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேற்காடு,திருவேற்காடு, அயனம்பாக்கம், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஸ்டாலின், 40; அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
கடந்த, 12ம் தேதி மாலை, கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, 'ஹீரோ ஸ்பிளெண்டர்' பைக்கை, மது போதையில் வந்த நபர் ஒருவர் கீழே தள்ளி விட்டுள்ளார்.
இதை, ஸ்டாலின் தட்டிக்கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த அந்த நபர், அருகில் இருந்த காய் நறுக்கும் கத்தியால், ஸ்டாலின் தலையில் வெட்டி தப்பினார். காயமடைந்த ஸ்டாலின், ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 10 தையல் போடப்பட்டது.
திருவேற்காடு போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சதீஷ், 25 என்பவரை நேற்று கைது செய்தனர்.

