ADDED : ஆக 13, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு: சொரக்காய்பேட்டை அரசு பள்ளியில் கலை திருவிழா போட்டி நடந்தது.
அரசு பள்ளிகளில் மாணவ - மாணவியரின் கல்வி இணை செயல்பாடுகளை கண்டறியும் விதமாக, ஆண்டுதோறும் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இயல், இசை, நாடகம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், தாலுகா, மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளுக்கு முன்னேறி செல்கின்றனர்.
இதில் வெற்றிபெறும் மாணவ - மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் துவங்கியுள்ளன.
சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று ஓவியம், களிமண் மற்றும் மணல் சிற்ப போட்டிகள் நடந்தன.