ADDED : அக் 14, 2025 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் , கலை திருவிழா நடந்தது.
தமிழக கல்வித்துறையின் சார்பில், பள்ளி மாணவர்களின் கலை உணர்வை வெளியே கொண்டு வரும் வகையில் கலை திருவிழா நடத்தப்படுகிறது. தற்போது, கடம்பத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், கடம்பத்துார் குறுவட்ட அளவிலான போட்டிகள் நேற்று நடந்தன.
இதில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 110 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர். பேச்சு, நடனம், திருக்குறள் வாசித்தல் என, 14 வகையான போட்டிகள் நடந்தன. இதில், முதலிடம் பெறும் மாணவர்கள், அடுத்த மாதம் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர்.
அதில், வெற்றி பெறுவோர் கல்வி அமைச்சருடன், சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என, கலை திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.