/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சட்டசபை மதிப்பீட்டு குழு திருவள்ளூர் வருகை
/
சட்டசபை மதிப்பீட்டு குழு திருவள்ளூர் வருகை
ADDED : ஜூலை 05, 2025 08:30 PM
திருவள்ளூர்:சட்டசபை மதிப்பீட்டு குழுவினர், வரும் 8ம் தேதி திருவள்ளூரில் கள ஆய்வு மேற்கொள்ள வருகின்றனர்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலன் உள்ளிட்ட 10 துறைகள் தொடர்பான திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வதற்காக, சட்டசபை மதிப்பீட்டு குழுவினர், வரும் 8ம் தேதி வருகின்றனர்.
குழு தலைவர் காந்திராஜன் தலைமையிலான குழு, திட்டத்தின் செயல்முறை வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். அதை தொடர்ந்து, பிற்பகல் 3:00 மணியளவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.