தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் உதவி

 மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் உதவி

 மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் உதவி


ADDED : நவ 30, 2025 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 12:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில், தொழில் நிதியுதவி பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு, நடப்பு 2025 - -26ம் ஆண்டிலிருந்து, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தி செயல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்கள், திருநங்கையர் தொழில் துவங்குதல் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான நிதியுதவி, திறன் பயிற்சி மற்றும் சந்தை இணைப்பு வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், ஆதரவற்ற கைம்பெண் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது வரம்பு 18 - 55. திருவள்ளூர் மாவட்டத்தில், 904 பேருக்கு மானியமாக வழங்க, 101.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள பெண்கள் உரிய ஆவணங்களுடன், www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 'பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை, திருவள்ளூர்' என்ற முக வரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us