/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தம்பதியிடம் ரூ.50 லட்சம் மோசடி ஜோதிடர் கைது
/
தம்பதியிடம் ரூ.50 லட்சம் மோசடி ஜோதிடர் கைது
ADDED : டிச 20, 2024 12:13 AM

வேளச்சேரி, வேளச்சேரி, பவானி தெருவைச் சேர்ந்தவர் கவிதா, 41; கடந்த 2022ம் ஆண்டு, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஜோதிடர் வெங்கடசுரேஷ் என்பவர் வீட்டுக்கு, கணவருடன் சென்றார்.
கவிதா ஜாதகத்தை பார்த்த ஜோதிடர், இப்போது தொழில் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.மேலும், தங்களிடம் காலி இடம் இருந்தால், பெட்ரோல் பங்க் துவங்க உரிமம் பெற்று தருவதாகவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய தம்பதி, திருவண்ணாமலை, வேட்டவலம் பகுதியில் 65 சென்ட் இடம் இருப்பதாக கூறியுள்ளனர். பின் ஜோதிடர், திருமுடிவாக்கத்தில் உள்ள விஜயபாஸ்கர் என்பவர் வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
விஜயபாஸ்கருக்கு டில்லியில் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளை தெரியும். இவர் வழியாக பங்க் நடத்த உரிமம் வாங்கலாம் எனக்கூறி, தம்பதியிடம் 50 லட்சம் ரூபாய் இருவரும் வாங்கியுள்ளனர்.
ஆனால், பெட்ரோல் பங்க் உரிமம் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியதுடன், ஜோதிடரும், விஜயபாஸ்கரும் தலைமறைவாகினர்.வேளச்சேரி போலீசார், வெங்கடசுரேஷை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கரை தேடுகின்றனர்.