/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தம்பதி மீது தாக்குதல் நால்வருக்கு வலை
/
தம்பதி மீது தாக்குதல் நால்வருக்கு வலை
ADDED : பிப் 29, 2024 01:52 AM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், அலுமேலுமங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ், 70. இவரது மனைவி ஜீவா, 62. இவர், நேற்று காலை தன் கணவருடன் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, ஆந்திர மாநிலம் நகரி அடுத்த தடுக்குபேட்டையைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர், உருட்டுக் கட்டைகளுடன் வந்து முன்விரோதம் காரணமாக ஜீவா மற்றும் அவரது கணவரை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்துச் சென்றனர்.
இதில் காயமடைந்த தம்பதியை மீட்ட அக்கம்பக்கத்தினர், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஜீவா கொடுத்த புகாரின்படி, லோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

