/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மளிகை கடைக்காரர் மீது தாக்குதல்
/
மளிகை கடைக்காரர் மீது தாக்குதல்
ADDED : பிப் 07, 2024 01:23 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துார் ஊராட்சிக்குட்பட்ட பட்டறை எல்லையம்மன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி, 57. இவர் பட்டறை அதிகத்துார் சாலையில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இவரது கடைக்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் தர மறுத்துள்ளனர். பணம் கேட்ட ஆறுமுகசாமியை மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி சென்றனர்.
அப்போது கடைக்கு வந்த சிலர் ஆறுமுகசாமி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து இருப்பதை பார்த்து சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கர் சுப்பிரமணியன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் மர்ம நபர்களை குறித்து விசாரித்து வருகிறார்.

