தனியார் நிறுவன சூப்பர்வைசர் மீது தாக்குதல்: மூவர் மீது வழக்கு
தனியார் நிறுவன சூப்பர்வைசர் மீது தாக்குதல்: மூவர் மீது வழக்கு
ADDED : ஆக 24, 2026 07:50 PM
அ நிறம் | அளவு
திருத்தணி, ஆக. 25–
திருவாலங்காடு ஒன்றியம், மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன், 27. இவர், அதே பகுதியில் உள்ள சோலார் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம், அவர் வேலையை முடித்துவிட்டு, மாலையில் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது, முன்விரோதம் காரணமாக, அதே கிராமத்தைச் சேர்ந்த சூர்யா, 26, அசோக்குமார் மற்றும் பவுண்குமார் ஆகியோர், சித்தேரி ஏரிக்கரையில் வழிமறித்து, லட்சுமணனை இரும்பு ராடு மற்றும் உருட்டை கட்டையால் தாக்கி தப்பினர்.
இதில் காயமடைந்த லட்சுமணன், சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து, லட்சுமணன் கொடுத்த புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் சூர்யா, அசோக்குமார், பவுண்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
