/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாஜி ராணுவ வீரரை தாக்கியவர் கைது
/
மாஜி ராணுவ வீரரை தாக்கியவர் கைது
ADDED : நவ 02, 2024 06:31 PM
திருவள்ளூர்:திருவள்ளூர், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் காந்திமதிநாதன், 42. ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் வளர்ப்பு நாயை மருத்துவமனைக்கு, காந்திமதிநாதன் அழைத்துச் சென்றுள்ளார்.
ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே, அங்கு நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம், 65 என்பவரும், அவரது மனைவி நாகராணி, 62, மகன் தினகரன், 42 ஆகிய மூவரும், காந்திமதிநாதனை முன்விரோதம் காரணமாக, வழிமறித்து ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த காந்திமதிநாதன் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து, தினகரனை கைது செய்து கிளைச்சிறையில் அடைத்தனர்.