ADDED : பிப் 15, 2024 08:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சலாயூதின், 45. இவர் நேற்று முன்தினம் நண்பர் ரசூல் என்பவருடன் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்துள்ளார்.
ரயில் நிலையம் அருகே உள்ள கடையில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், 'இது எனது இடம். இங்கு எப்படி நீ சாப்பிடலாம்' என கேட்டு ஆபாசமாக பேசி, கற்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சலாயூதின் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து, திருவள்ளூர் நகர போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சலாயூதினை தாக்கிய நபர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார், 36 என தெரிந்தது.
இதையடுத்து திருவள்ளூர் நகர போலீசார் முத்துக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.