ADDED : மார் 17, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 26.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் 14ம் தேதி இரவு தன் இரு சக்கர வாகனத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் கன்னியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நவரத்தினம், ஆசிர்வாதம், முருகன் ஆகிய மூவரும் வழிமறித்து ஆபாசமாக பேசி இரும்பு ராடால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகார்படி கடம்பத்துார் போலீசார், விசாரித்து வருகின்றனர்.

