/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆட்டோ சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஆட்டோ சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 04, 2025 10:26 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில், திருத்தணியில் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. திருத்தணி நகர கமிட்டி தலைவர் ராஜா தலைமை வகித்தார்.
இதில், சி.ஐ.டி.யூ., மாநில துணை தலைவர் மகேந்திரன் பங்கேற்று, ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். இதில், 150க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
ஆட்டோ தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில், திருத்தணி போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருகின்றனர்.
இதனால், ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதுதவிர, மோட்டார் வாகன ஆய்வாளரும், அடிக்கடி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கிறார். போலீசார் பொய் வழக்கு போடுவதால், ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்க்கை கேள்விகுறியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.