UPDATED : அக் 13, 2026 09:22 PM
ADDED : அக் 13, 2026 08:58 PM
அ நிறம் | அளவு
திருவாலங்காடு: ராமஞ்சேரி அருகே, ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.
சென்னையை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 36. ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று திருத்தணியில் உள்ள தன் சகோதரி வீட்டிற்கு, ஆட்டோவில் வந்தார்.
சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ராமஞ்சேரி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோரத்தில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இதில், கோவிந்தராஜ் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
