/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதையில் பைக்கை நொறுக்கிய ஆட்டோ டிரைவர்கள் கைது
/
போதையில் பைக்கை நொறுக்கிய ஆட்டோ டிரைவர்கள் கைது
ADDED : ஜன 26, 2025 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில், ரயில் நிலையம் அருகே, ஆட்டோ ஸ்டான்ட் உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா, 26, மற்றும் ராஜா, 28, ஆகிய இருவரும் ஆட்டோ ஓட்டுனர்களாக உள்ளனர்.
இங்கு தொழுதாவூரைச் சேர்ந்த ஜெயகரன், 35, என்பவரும், ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சூர்யா மற்றும் ராஜா இருவரும், போதையில் ஜெயகரனிடம் தகராறு செய்ததுடன் அவரது இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்துள்ளனர்.
இதுகுறித்து ஜெயகரனின் அண்ணன் சித்திரை ஸ்டாலின் அளித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

