பயணியரை ஏற்றுவதில் தகராறு :ஆட்டோ ஓட்டுநர்கள் மோதல்
பயணியரை ஏற்றுவதில் தகராறு :ஆட்டோ ஓட்டுநர்கள் மோதல்
UPDATED : அக் 15, 2026 08:34 PM
ADDED : அக் 15, 2026 08:06 PM
திருவள்ளூர்: திருவள்ளூரில், ஷேர் ஆட்டோவில் பயணியரை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில், ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
திருவள்ளூர் அடுத்த வள்ளுவர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார், 41. ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் காலை, திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே பயணியரை ஏற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான, மேல்விளாகம் பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற முருகானந்தம், 34, என்பவரும் பயணியரை ஏற்றினார்.
அப்போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் ஆபாசகமாக பேசி, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் காயமடைந்த இருவரும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, இருவரும் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
