ADDED : பிப் 05, 2026 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: வேலூர் மாவட்டம் சஞ்சீவிராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன், 50. இவர், நேற்று காலை திருத்தணி ஒன்றியம் பி.சி.என்.கண்டிகை கிராமத்தில் தர்ப்பூசணி பழங்களை கொள்முதல் செய்வதற்காக ஆட் டோவில் வந்தார்.
அப்போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோர விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக முனியப்பன் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.
பொக்லைன் இயந்திரம் உதவியுடன், சரக்கு ஆட்டோ மீட்கப்பட்டது. இதுகுறித்து, திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.

