/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆட்டோ திருடியவர் கைது மூவருக்கு வலை
/
ஆட்டோ திருடியவர் கைது மூவருக்கு வலை
ADDED : செப் 14, 2025 10:05 PM
ஊத்துக்கோட்டை:கிருஷ்ணாபுரம் கண்டிகையைச் சேர்ந்தவர் துரைசாமி, 45. சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தி விட்டு சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது ஆட்டோ மாயமானது.
பனப்பாக்கம் கிராமம் அருகே கூட்டமாக மக்கள் இருந்ததை கண்டு அங்கு சென்றார். அப்போது, தன் ஆட்டோ இருந்தது தெரிந்தது.
இதுகுறித்து விசாரித்ததில், மர்ம நபர்கள் நான்கு பேர் ஆட்டோவில் வந்து காரை திருட முயன்றபோது, துரைசாமிக்கு சொந்தமான ஆட்டோவை திருடிச் சென்றது தெரிந்தது.
தகவல் அறிந்து வந்த பெரியபாளையம் போலீசார், ஒருவரை கைது செய்தனர். மற்ற மூன்று பேர் தப்பியோடினர். விசாரணையில், பிடிபட்ட நபர், சென்னை அப்பர் நகர் கார்த்திக், 22, என தெரிந்தது.
பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.