ADDED : செப் 25, 2024 01:09 AM

திருவள்ளூர்:அரசின் வரிக்கொள்கை மற்றும் கார்பரேட் நல நடவடிக்கைகளாலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
எரிபொருள் விலை உயர்வு, மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாதது, இன்சூரன்ஸ், எப்.சி., கட்டணம் உயர்ந்து கொண்டு வருகிறது.
புதிய மோட்டார் வாகன சட்டம் தொழில் செய்து வாழ முடியா நிலைக்கு தள்ளியுள்ளது. இதை கண்டித்து திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திருவள்ளூர் மாவட்ட சி.ஐ.டி.யூ., ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் கரிமுல்லா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓட்டுனர்களை பாதிக்கும் புதிய மோட்டார் வாகனத்தை மத்திய, மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்க வேண்டும், ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.