தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஆட்டோ தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆட்டோ தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆட்டோ தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 26, 2026 05:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 05:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருத்தணி: திருத்தணியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருத்தணி ரயில் நிலையம் அருகே திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (அக்.,26) நடந்தது. நகர தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவர் கரிமுல்லா வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலர் சந்திரசேகரன், விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் அப்சல்அஹமத் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ஆர்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்று, ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வை சீரழிக்கும் மகளிர் வெற்றி பயணத் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

ஆட்டோ தொழிலாளர்களுக்கு, மாதம், 5 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்க வேண்டும். 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணத்தை நீதிமன்ற உத்தரவின் படி உயர்த்த வேண்டும்.

ஆட்டோ தொழிலாளர் நல வாரியம் மூலமாக தீபாவளிக்கு 5,000 ரூபாய் போனஸ் வாங்க வேண்டும் உள்பட 10 கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

மேலும் திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம், அரசு விடுமுறை நாட்கள், திருமண முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறை நாளான ஞாயிறு ஆகிய நாட்களில் மலைக்கோவிலுக்கு ஆட்டோக்களை அனுமதிப்பதில்லை. இதை கோவில் நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என, ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

★★

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us