/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெயரளவில் செயல்படும் பணிமனை பொதட்டூர்பேட்டையில் அவதி
/
பெயரளவில் செயல்படும் பணிமனை பொதட்டூர்பேட்டையில் அவதி
பெயரளவில் செயல்படும் பணிமனை பொதட்டூர்பேட்டையில் அவதி
பெயரளவில் செயல்படும் பணிமனை பொதட்டூர்பேட்டையில் அவதி
ADDED : மார் 11, 2024 07:08 AM

பொதட்டூர்பேட்டை: பொதட்டூர்பேட்டையில் கடந்த 15 ஆண்டுகளாக அடிப்படை வசதி ஏதும் இன்றி செயல்பட்டு வரும் பேருந்து பணிமனையால் எந்தவித பயனும் இல்லை என அப்பகுதிவாசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பொதட்டூர்பேட்டையில் இருந்து அத்திமாஞ்சேரிப்பேட்டை செல்லும் சாலையில், ஏரிக்கரையை ஒட்டி பேருந்து பணிமனை செயல்பட்டு வருகிறது.
இதில், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன.
அதிலும், நகர பேருந்துகள் அதிகம். பணிமனையில் இருந்து, தொலைதுார நகரங்களுக்கு அதிகாலையில் புறப்படும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது அப்பகுதிவாசிகளின் எதிர்பார்ப்பு. 30 ஆயிரம் பேர் வசிக்கும் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிப்பவர்கள், இதன் வாயிலாக, எளிதாக நேரடி பயணம் மேற்கொள்ள முடியும். ஆனால் தற்போது, நகர பேருந்துகளில் பயணித்து, திருத்தணி, சோளிங்கர் வரை மட்டுமே பயணிக்க முடிகிறது.
அங்கிருந்து மீண்டும் வேறு பேருந்துகளை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. உள்ளூரில் பணிமனை இருந்தும் பயனில்லை என அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த பணிமனையில், பேருந்துகளுக்கு டீசல் நிரப்பவும், பேருந்துகளை பழுது நீக்கம் செய்ய தேவையான வசதிகள் இல்லாததால், பெயரளவிற்கு மட்டுமே நகர பேருந்துகள் இங்கு வந்து செல்கின்றன என அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

