தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு


ADDED : பிப் 29, 2024 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. 110 அரங்குகளில், 10த்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில், புத்தகங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.

கண்காட்சியை பார்வையிடவும், புத்தகங்களை வாங்கவும், மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள் என, தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.

மேலும், பகலில், அரசு பள்ளி மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், மாலை பட்டிமன்றம், சிந்தனையூட்டும் பேச்சாளர்களின் உரைவீச்சும் நடக்கிறது.

இந்நிலையில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருவள்ளூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கு மஞ்சள் பை வழங்கி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us