/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிளாஸ்டிக் ஒழிப்பு மாணவியரிடம் விழிப்புணர்வு
/
பிளாஸ்டிக் ஒழிப்பு மாணவியரிடம் விழிப்புணர்வு
ADDED : டிச 04, 2024 11:32 PM

திருத்தணி,
திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில், திருத்தணி நகராட்சி நிர்வாகம், வெங்கடாசலபதி நாடக குழு வாயிலாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திடக்கழிவு மேலாண்மை பணிகள், மட்கும், மட்கா குப்பை, 'என் குப்பை என் பொறுப்பு', பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு காய்ச்சல், மழைநீர் சேகரிப்பு, மஞ்சப்பை பயன்படுத்துதல், தன் சுத்தம், சுற்றுப்புற பாதுகாப்பு, புகையிலை தடுப்பு, கழிப்பறை பயன்படுத்துதல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் திருத்தணி நகராட்சி தலைவர் சரஸ்வதி, நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து கலைக்குழு சார்பில், மேற்கண்டவை குறித்து நாடகம் வாயிலாக பள்ளி மாணவியர் மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக, நகராட்சி ஆணையர், ஊழியர்கள் மாணவியருடன் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு அலுவலர் இளங்கோவன், ஆய்வாளர் ரவிச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியை கலாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.