/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பலகைகள் அமைப்பு
/
திருத்தணியில் சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பலகைகள் அமைப்பு
திருத்தணியில் சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பலகைகள் அமைப்பு
திருத்தணியில் சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பலகைகள் அமைப்பு
ADDED : பிப் 19, 2025 01:46 AM

திருத்தணி,:திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் அனைத்து வகையான வாகனங்கள் சென்றவாறு இருக்கும். இந்நிலையில் திருத்தணி - ஆர்.கே.பேட்டை இடையே உள்ள, 22 கி.மீ., துாரம் இருவழிச்சாலையாக உள்ளதாலும், அதிக வாகனங்கள் செல்வதாலும், விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன. ஒராண்டில் குறைந்தபட்சம், 12 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.
அதே போல, 100க்கும் மேற்பட்டோர் வாகன விபத்துக்குள்ளாகி தவித்து வருகின்றனர். இதற்கு காரணம், சாலை விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகள் தெரியாமல் செல்வதால் விபத்துகள் நடக்கிறது என, நெடுஞ்சாலைத் துறையினர் அறிந்து அதை தடுப்பதற்கு புதிய முயற்சி எடுத்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக மேற்கண்ட நெடுஞ்சாலையில், முக்கிய இடங்களில் சாலை விதிமுறைகள் குறித்து படத்துடன் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி விளம்பர பலகைகளை சாலையோரம் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து திருத்தணி நெடுஞ்சாலை துறை உதவி கோட்டா பொறியாளர் ரகுராமன் கூறியதாவது:
திருத்தணி - ஆர்.கே.பேட்டை இடையே மாநில நெடுஞ்சாலையில், விபத்துகள் தடுக்கவும், வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையில், 15 இடங்களில் முதற்கட்டமாக, 10 லட்சம் ரூபாயில், சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் படங்கள் வரைந்தும் மெதுவாக செல்லவும், இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும்போது தலைகவசம் அணிவது அவசியம் என, எழுதி வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
மேலும், வேகத்தடைகள் அமைத்தும் அதற்கு வர்ணம் தீட்டி வாகன ஓட்டிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.