/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை பொருள் ஒழிப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
போதை பொருள் ஒழிப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : அக் 04, 2025 10:30 PM
திருவள்ளூர்:பள்ளி மாணவ - மாணவியருக்கு மருத்துவ துறையினர் மூலம், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூர், அரசு உதவி பெறும் டி.ஆர்.பி.சி.சி., இந்து மேல்நிலைப் பள்ளியில், என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாமில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் ஜெகதீஷ் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போதை பொருளின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், மாணவ - மாணவியர், போதை பொருள் இல்லா சமூகத்தை உருவாக்கும் வகையில், விழிப்புணர்வை பரப்ப உறுதிமொழி எடுத்தனர்.