ஓட்டு செலுத்துவது குறித்து முதியோருக்கு விழிப்புணர்வு
ஓட்டு செலுத்துவது குறித்து முதியோருக்கு விழிப்புணர்வு
ADDED : பிப் 18, 2026 05:25 AM

திருவள்ளூர்: தனியார் தொண்டு நிறுவனத்தில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருவள்ளூர் அடுத்த பாக்கம் சேவாலயா தொண்டு நிறுவனத்தில் நேற்று, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரதாப் தலைமை வகித்தார்.
தொண்டு நிறுவனத்தில், தங்க வைக்கப்பட்டுள்ள 80 வயதை கடந்த முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 100-க்கும் மேற்பட்டோரிடம், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டு அளிக்கும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது.
முன்னதாக, பள்ளி மாணவர்கள், வாக்காளர் விழிப்புணர்வு குறித்த குறும்பாடல்களை பாடினர். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், வாக்காளர் பதிவு அலுவலர் கணேசன், மாவட்ட சமூக நல அலுவலர் வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
