/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு
/
சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு
ADDED : பிப் 22, 2024 10:56 PM

அரக்கோணம், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் தேசியப் பேரிடர் மீட்பு மையம் அமைந்துள்ளது. இங்கு ராணிப்பேட்டை எஸ்.பி., கிரண் ஸ்ருதி உத்தரவுபடி அரக்கோணம் சைபர் கிரைம் போலீசார் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் நிதி நிறுவன மோசடி, போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி, போலி கடன் செயலி போன்றவை பற்றியும் அவர்கள் தொடர்பு கொள்ளும் முறை குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரி உள்ளிட்டவையை பயன்படுத்தும் முறையை தெரிவித்தனர். சைபர் கிரைம் எஸ்.ஐ., தியாகராஜன் மற்றும் தேசியப் பேரிடர் மீட்பு படை மைய வீரர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.