
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருமழிசை அடுத்த பழஞ்சூர் பகுதியில் பொது சுகாதாரத் துறையும், லயோலா கல்லுாரி மற்றும் டி.எம்.ஐ., பொறியியல் கல்லுாரியும் இணைந்து ரேபிஸ் நோய்த் தடுப்பு தினம் விழிப்புணர்வு பேரணியை நேற்று நடத்தினர்.
நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் யுவஸ்ரீ தலைமையில் நடந்த பேரணியில் டி.எம்.ஐ., பொறியியல் கல்லுாரி முதல்வர் சுஜாதா ஆனந்த், கல்லுாரி நிர்வாகி நம்பிக்கை மேரி, ஒருங்கிணைப்பாளர் கே.எஸ். காமராஜ், சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் சுகாதார பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
பேரணியில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய கட்டாயம்குறித்து மருத்துவ அலுவலர் யுவஸ்ரீ பேசினார்.