/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இருசக்கர வாகன ஓட்டிகள் விழிப்புணர்வு பேரணி
/
இருசக்கர வாகன ஓட்டிகள் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 28, 2025 02:58 AM

திருத்தணி:இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
திருத்தணி நகரத்தில் பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள், 'ஹெல்மெட்' அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுவதுடன், உயிரிழப்புகள் அதிகளவில் நடந்து வருகின்றன.
இதை தடுக்கும் வகையில் நேற்று, ஹெல்மெட் கட்டயாம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, இருசக்கர வாகன ஓட்டிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், முருகன் கோவில் அறங்காவலர் சுரேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, திருத்தணி பைபாஸ் சாலையில் இருந்து, பட்டாபிராமபுரம் வரை ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக, திருத்தணி ரயில் நிலையம் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த, 100 பேருக்கு ஹெல்மெட் இலவசமாக வழங்கப்பட்டது.
அப்போது, டி.எஸ்.பி., கந்தன் கூறுகையில், ''சாலை விதிகளை பின்பற்றாமல் நடக்கும் விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து, சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்,” என்றார்.