/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு
/
சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு
ADDED : ஜன 24, 2025 01:34 AM

திருவாலங்காடு:பட்டரைப்பெரும்புதூரில் அமைந்துள்ளது டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி. இக்கல்லூரி கூட்டரங்கில் நேற்று, சைபர் குற்றங்களை தடுக்க இணையதள தடய அறிவியல் துறை வாயிலாக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இதில், இணைய தளம் வாயிலாக நடக்கும் குற்றங்களை தடுக்கவும், இணையதள தடயவியல் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அத்துறையின் மூத்த தடயவியல் அலுவலர் ரமணன், விரிவாக எடுத்துரைத்தார். மேலும் சைபர் குற்றவாளிகளிடம் இருந்து தங்களை பாதுகாக்கும் வழி முறைகள் குறித்து விளக்கினார்.
இதில், திருவள்ளூர் மாவட்ட சைபர் குற்ற தடுப்பு போலீசார் ஷாலினி மற்றும் பழனி அம்பேத்கர் சட்டக்கல்லூரி முதல்வர் ஜேம்ஸ் ஜெயபால் மற்றும் பேராசிரியர், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

