ADDED : மார் 28, 2026 06:18 AM

அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் விளையாடி கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை, பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது.
கும்மிடிப்பூண்டி, கங்கன்தொட்டி பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி பாபு. இவரது மனைவி லதா. தம்பதிக்கு 2 வயதில் தர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று, வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த தர்ஷன், அங்கிருந்த பிளாஸ்டிக் பக்கெடில் இருந்த தண்ணீரில் விழுந்து, மூச்சு பேச்சின்றி கிடந்தது.
இதை கண்ட பெற்றோர், கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில், குழந்தை ஏற்கனவே இறந்தது தெரிந்தது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
