/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிற்படுத்தப்பட்ட மாணவியர் உதவித்தொகை பெற அழைப்பு
/
பிற்படுத்தப்பட்ட மாணவியர் உதவித்தொகை பெற அழைப்பு
ADDED : ஜன 18, 2024 10:15 PM
திருவள்ளூர்:பிற்படுத்தப்பட்ட மாணவியர், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவியருக்கு, ஆண்டுக்கு 4,000 ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவியர், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது அஞ்சலகத்தில், தங்கள் பெயரில் வங்கிக் கணக்கு துவக்கி, அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
இந்த ஆதார் எண் மற்றும் வங்கி விபரத்துடன், வருமான சான்று மற்றும் ஜாதிச்சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் மாணவியரது விபரங்களை EMIS (Educational Management Information System) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

