ADDED : ஆக 08, 2026 02:58 AM
அ நிறம் | அளவு
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தை சேர்ந்த உமா, 44, என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில், 'பேக்கரி' நடத்தி வருகிறார்.
அங்கு நேற்று, எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த பள்ளிப்பட்டு தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், பேக்கரியில் இருந்த சாதனங்கள் மற்றும் உணவு பொருட்கள் என, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
ஆர்.கே.பேட்டை போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, தெரியவந்துள்ளது.
