/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் கால்வாய் அமைக்க பாலாஜி நகர் மக்கள் மனு
/
மழைநீர் கால்வாய் அமைக்க பாலாஜி நகர் மக்கள் மனு
ADDED : ஜூலை 26, 2025 09:09 PM
திருத்தணி:பாலாஜி நகரில் மழைநீர் கால்வாயை அகலப்படுத்தி, புதிதாக கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
திருத்தணி நகராட்சி, முருகன் மலைக்கோவிலில் இருந்து, நரசிம்மசுவாமி கோவில் தெரு, அக்கைய்யநாயுடு தெரு, ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை மற்றும் என்.எஸ்.சி.போஸ் சாலை வழியாக, அங்குள்ள ரயில்வே சுரங்கப்பாதைக்கு மழைநீர் செல்கிறது.
அங்கிருந்து, பூண்டி நீர்த்தேக்கத்தை சென் றடைகிறது. பாலாஜி நகர் மற்றும் கீழ்பஜார் தெரு ஆகிய இடங்களில் முறையாக மழைநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், ஒரு மணி நேரம் மழை பெய்தால், மழைநீர் கால்வாயில் செல்ல முடியாமல் வீடுகளில் மழைநீர் புகுந்து விடுகிறது.
இதனால், பாலாஜி நகர், கீழ்பஜார் தெரு மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். நேற்று, மேற்கண்ட பகுதிமக்கள், நகராட்சி ஆணையரிடம் மழைநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.
ஏற்கனவே உள்ள கால்வாயை அகலப்படுத்த வேண்டும் என, மனு அளித்தனர்.
மேலும், பாலாஜி நகர் கால்வாயில் இறைச்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதால் அடைப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியத்திடம், பாலாஜி நகர் மக்கள் வலியுறுத்தினர்.