தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ உண்டியல் உடைத்து திருட்டு

உண்டியல் உடைத்து திருட்டு

உண்டியல் உடைத்து திருட்டு


ADDED : நவ 13, 2024 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2024 01:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவரம்:சோழவரம் அடுத்த சோத்துப்பெரும்பேடு கிராமத்தில், லட்சுமிநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் முகப்பில் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து கோவில் பூட்டப்பட்டது. நேற்று காலை கோவிலை திறக்க சென்ற கோவில் நிர்வாகிகள், அங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டனர்.

அதையடுத்து கோவிலில் உள்ள 'சிசிடிவி'யை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் இரண்டு இளைஞர்கள் கோவிலுக்குள் நுழைந்து, உண்டியலை கடப்பாரையால் பெயர்த்து, அதிலிருக்கும் பணத்தை திருடி செல்லும் காட்சி தெரிந்தது.

இது குறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us