/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தச்சூர் பேருந்து நிறுத்ததில் தொடரும் பேனர் கலாசாரம்
/
தச்சூர் பேருந்து நிறுத்ததில் தொடரும் பேனர் கலாசாரம்
தச்சூர் பேருந்து நிறுத்ததில் தொடரும் பேனர் கலாசாரம்
தச்சூர் பேருந்து நிறுத்ததில் தொடரும் பேனர் கலாசாரம்
ADDED : பிப் 16, 2025 03:43 AM

கும்மிடிப்பூண்டி':சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அருகே உள்ளது தச்சூர் கூட்டு சாலை. பொன்னேரி, சென்னை, கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று சாலைகள் அங்கு சந்திக்கின்றன.
அங்கு, கும்மிடிப்பூண்டி திசையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பேருந்து பயணியர் நிழற்குடை கிடையாது. இதனால் சாலையோரம் பேருந்துக்காக பயணியர் காத்திருக்க வேண்டும்.
அங்கு காத்திருக்கும் பயணியருக்கு பின்னால் விளம்பர பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. எந்த நேரத்தில் எந்த பேனர் விழுமோ என்ற அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
பயணியர் பாதுகாப்பு கருதி, அப்பகுதியில் உள்ள பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் இது போன்று பேனர்கள் வைக்காமல் இருக்க, கவரைப்பேட்டை போலீசார் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேருந்து பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

