/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒதப்பையில் தொடரும் பேனர்கள் கலாசாரம்
/
ஒதப்பையில் தொடரும் பேனர்கள் கலாசாரம்
ADDED : டிச 18, 2024 12:07 AM

ஊத்துக்கோட்டை:அனுமதியன்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்தும், பொதுமக்கள் அதை ஒரு பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. இதை தடுக்க வேண்டிய அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.
பொதுமக்கள் குழந்தை பிறப்பது முதல் பெயர் வைத்தல், காதுகுத்தல், மஞ்சள் நீராட்டு விழா, திருமணம் துவங்கி, இறப்பு சம்பவம் வரை சாலைகளில் பேனர் வைப்பதை வழக்கமாக செயல்படுத்த வருகின்றனர். இது தவிர அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் பேனர்கள் வைக்கப்படுகின்றன.
சென்னையில் அனுமதியின்றி வைத்த பேனர் விழுந்ததில் உயிர்பலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரசு அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டாா்.
ஊத்துக்கோட்டை பேரூராட்சி துவங்கி, திருவள்ளூர் செல்லும் வழியில் சாலையில் போந்தவாக்கம், சீத்தஞ்சேரி, ஒதப்பை ஆகிய பகுதிகளில் அடுத்ததடுத்து பேனர்கள் வைத்துள்ளனர்.
மழைக்கு குண்டும் குழியுமான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையில் தெரியும் பேனர்களால் கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, அனுமதியின்றி வைக்கப்பட்டபேனர்களை அகற்றி, அதை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இதை கண்டு கொள்ளாத உள்ளாட்சி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.