/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடைகள் நுழைவதை தடுக்க மருத்துவமனை வாயிலில் தடுப்பு
/
கால்நடைகள் நுழைவதை தடுக்க மருத்துவமனை வாயிலில் தடுப்பு
கால்நடைகள் நுழைவதை தடுக்க மருத்துவமனை வாயிலில் தடுப்பு
கால்நடைகள் நுழைவதை தடுக்க மருத்துவமனை வாயிலில் தடுப்பு
ADDED : நவ 07, 2024 01:02 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கால்நடைகள் நுழைவதை தடுக்க நுழைவுவாயிலில் இரும்பு குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, ஆறு மாடி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, திருவள்ளூர் நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, பிரசவத்திற்காக கர்ப்பிணியர் வந்து செல்கின்றனர்.
மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிரசவத்திற்கு கர்ப்பிணியர் இங்கு வருகின்றனர். கர்ப்பிணியரின் உறவினர்கள் மற்றும் உதவியாளர் என, தினமும் மருத்துவமனை வளாகத்தில், 50க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், சாலையில் திரியும் கால்நடைகள் மருத்துவமனைக்குள் நுழைவதால், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், அருகிலேயே விபத்து சிகிச்சை பிரிவும் செயல்பட்டு வருவதால், ஊழியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைக்குள் கால்நடைகள் வராமல் தடுக்கும் வகையில், நுழைவாயிலில் இரும்பு கம்பி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை விரைந்து முடித்தால் தான், ஆம்புலன்ஸ் வாகனங்களும், நோயாளிகள் மற்றும் உறவினர்கள் நுழைவாயிலை பயன்படுத்த முடியும். எனவே, இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.