/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போளிவாக்கம் - பாப்பரம்பாக்கம் நெடுஞ்சாலையில் தடுப்புகள் சேதம்
/
போளிவாக்கம் - பாப்பரம்பாக்கம் நெடுஞ்சாலையில் தடுப்புகள் சேதம்
போளிவாக்கம் - பாப்பரம்பாக்கம் நெடுஞ்சாலையில் தடுப்புகள் சேதம்
போளிவாக்கம் - பாப்பரம்பாக்கம் நெடுஞ்சாலையில் தடுப்புகள் சேதம்
ADDED : ஏப் 25, 2025 02:18 AM

போளிவாக்கம்:கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது போளிவாக்கம். இங்கிருந்து பாக்குபேட்டை, வலசைவெட்டிகாடு, இலுப்பூர் வழியாக பாப்பரம்பாக்கம், மண்ணுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில், போளிவாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் நீர் செல்லும் வகையில், சிறு தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு இரு ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத் துறையினர் இரும்பு தகடுகளால் தடுப்புகள் அமைத்தனர்.
தற்போது, இந்த தடுப்புகள் சேதமடைந்து ள்ளன. இதனால், வாகனங்களில் செல்வோர் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர், கனரக வாகனங்களுக்கு வழிவிடும்போது விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தரைப்பாலத்தில் சேதமடைந்த தடுப்புகளை சீரமைக்க வேண்டுமென, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.